திருவொற்றியூர் அரசு பள்ளிக்கு ரூ.99 லட்சம் செலவில் புதிய வகுப்பறை பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அரசு பள்ளிக்கு ரூ.99 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டும் பணியை கே.பி.சங்கர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருவொற்றியூர் மண்டலம், காலடிப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 175 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை இருந்தது. இதனையடுத்து கூடுதல் வகுப்பறை வேண்டும் என்று ஆசிரியர்கள் கே.பி.சங்கர் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், 2022-23ம் நிதி ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.99 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்ட திட்டமிடப்பட்டு, இதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. இதில் செயற்பொறியாளர் உசேன் தலைமை வகித்தார். கே.பி.சங்கர் எம்எல்ஏ பணிகளை தொடங்கி வைத்தார். 3 வகுப்பறை, ஒரு ஆசிரியர் அறை மற்றும் கழிவறையுடன் கூடிய பள்ளி கட்டிடம் கட்டப்படுகிறது. நிகழ்ச்சியில் தலைமை உதவி செயற் பொறியாளர் ஆனந்தராவ், கவுன்சிலர் பானுமதி, திமுக நிர்வாகிகள் ராமநாதன், மதன்குமார், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

ஆரணி அருகே அழிந்த கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு

டிராக்டரில் உணவு தேடிய யானை: வீடியோ வைரல்