திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பஞ்சரத்ன கீர்த்தனை: மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா

திருவாரூர்: திருவாரூரை சேர்ந்த சங்கீத மும்மூர்த்திகள் தியாக பிரம்மர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி. மும்மூர்த்திகள் 3 பேருக்கும், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் காஞ்சி காமகோடி டிரஸ்ட் சார்பில் ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. அதன்படி கடந்த 24ம் தேதி மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவை புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார்.

இதைதொடர்ந்து தினம்தோறும் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. கடைசி நாளான இன்று காலை பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனை வாசித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

Related posts

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு