தமிழகத்தில் முதல் மாவட்டமாக திருப்பூரில் செவிலியர் கல்லூரி :அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

திருப்பூர்:‘தமிழகத்தில் முதல் மாவட்டமாக திருப்பூரில் செவிலியர் கல்லூரி அமைக்கப்படும்’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 500 கூடுதல் படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் 11 செவிலியர் கல்லூரிகள் அமைத்துக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கிய நிலையில் முதல் மாவட்டமாக திருப்பூர் மாவட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு அதற்காகரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.

அது மட்டுமல்லாது திருப்பூர் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நிதி திரட்டப்பட்டு வருகிறது. 30 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு தற்போது 17 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி உள்ள நிலையில் புற்றுநோய் சிகிச்சை மையம் விரைவில் அமைக்கப்பட இருக்கிறது. நாகையில் ஹிஜாப் அணிந்த மருத்துவரை அவதூறு செய்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பருவமழை ஆரம்பிப்பதற்கு முன் ஏரி, குளத்தை தூர்வார ஈஸ்வரன் கோரிக்கை..!!

சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை

ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் செஸ் வீரர் குகேஷ்..!!