திருப்பூர் அருகே அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்தது: நல்வாய்ப்பாக குழந்தைகள் உள்பட 57 பேர் காயமின்றி உயிர்தப்பினர்

திருப்பூர்: திருப்பூர் அருகே அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது. செங்கோட்டையிலிருந்து திருப்பூர் நோக்கி 57 பயணிகளுடன் வந்த அரசு பேருந்தை ஓட்டுநர் சரவணன் என்பவர் இயக்கி வந்தார். திருப்பூர் கோவை பேருந்து நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பேருந்து புதுரோடு பகுதியில் சென்ற பொது ஜேசிபி வாகனம் ஒன்று குறுக்கே வந்தது.

அப்போது அதன் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் இடது புறம் பேருந்தை திருப்பிய போது பேருந்து கடைக்குள் புகுந்தது. கடையின் முன்பு யாரும் இல்லாததாலும், சமயோஜிதமாக ஓட்டுநர் பேருந்தை மெதுவாக இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 57 பேர் காயமின்றி உயிர்தப்பினர். தகவல் அறிந்து வந்த போலீசார் பயணிகளை மீட்டு அனுப்பிவைத்தனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு