திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் நின்று கொண்டு இருந்த சரக்கு லாரி மீது சொகுசு கார் மோதியதில் லாரி மற்றும் கார் முழுவதும் எறிந்து சேதம்

காங்கேயம் சாலை ராக்கியாபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் இரவு பணி நிமித்தமாக அவினாசி சென்று கொண்டிருந்தார். இவர் கல்லூரி சாலையில் சென்று கொண்டு இருந்த போது கார் கட்டுப்பாடை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரமாக நின்று கொண்டு இருந்த சரக்கு லாரியின் டீசல் டேங் மீது பலமாக மோதியதில் அந்த லாரியின் டீசல் டேங் சேதம் அடைந்து டீசல் வெளியே கொட்ட தொடங்கியது. இந்த நிலையில் எதிர்பாரத விதமாக கார் என்ஜின் வெப்பம் காரணமாக தீ பிடித்து மல மல வென கார் மற்றும் லாரி முழுவதும் தீ பரவி முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது.

காரை இயக்கி வந்த சக்திவேல் காரில் இருந்து இறங்கியதாலும் லாரியில் யாரும் இல்லாத காரணத்தாலும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்தை ஏற்ப்படுத்திய சக்திவேல் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தீ பிடித்து எரியும் வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்