திண்டிவனம் அருகே பரபரப்பு வயல்வெளியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

*கொலையா? போலீசார் விசாரணை

திண்டிவனம் : திண்டிவனம் அருகே வயல்வெளி பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்ட போலீசார், கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த சிங்கனூர் ஏரிக்கரை அருகே உள்ள வயல்வெளி பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக மயிலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மற்றும் திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் ஆகியோர் பெண் சடலத்தை பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

மேலும் தடய அறிவியல் நிபுணர் சுரேஷ், கைரேகை நிபுணர்கள் தட்சிணாமூர்த்தி மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்தும், வயல்வெளியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அழுகிய நிலையில் பெண் சடலமாக கிடந்ததால், பாலியல் தொந்தரவு அளித்து, யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு