திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் மைக்கை உடைத்த அதிமுக கவுன்சிலர்

திண்டிவனம்: திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் மைக்கை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் நகராட்சியில் நேற்று மாலை நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில், நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டம் துவங்கியதில் இருந்து கவுன்சிலர்கள் அந்தந்த வார்டுகளில் வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சி ஆணையரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு நகராட்சி ஆணையர் பதிலளித்து வந்த நிலையில், அதிமுக கவுன்சிலர் ஜனார்த்தனன் எழுப்பிய கேள்விக்கு நகராட்சி ஆணையர் பதில் அளிக்காததால், மைக்கை ஓங்கி தரையில் அடித்து உடைத்தார். இதனால் நகரமன்ற கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், சரவணன், கார்த்திக், திருமகள் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு