டைம் இன்னும் இருக்குங்ணா… இப்பவே கூட்டணிக்கு அவசரம் இல்ல: அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் குறைந்தது 25 தொகுதிகளிலாவது வெற்றி அடைய வேண்டும் என்று அமித்ஷா மிகத் தெளிவாக கூறினார். அவர் கூறியதில் எந்தத் தவறும், குழப்பமும் இல்லை என்று அண்ணாமலை கூறினார். சென்னை விமான நிலையத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: பாஜவில் சாதாரண பூத் கமிட்டி தலைவராக இருப்பவர், கட்சியின் அகில இந்திய தலைமை மற்றும் இந்தியாவில் எந்த ஒரு உயர் பதவிக்கும் வரலாம். அதற்கு உதாரணம் ஜனா.கிருஷ்ணமூர்த்தி. இதைத்தான் அமித்ஷா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், பிரதமர் பதவி அளவுக்கு உயர வேண்டும் என்று கூறினார். அதைப்போல் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். குறைந்தது 25 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று மிகத் தெளிவாக கூறினார். அவர் கூறியதில் எந்தவிதமான தவறோ குழப்பமோ இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. நேரம் காலம் வரும்போது, கூட்டணி கட்சி தலைவர்களுடன், கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

Related posts

சென்னை மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் குடோனில் தீ விபத்து

பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்

யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்