இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: அதிபர் விக்கிரமசிங்கே அறிவிப்பு

கொழும்பு; இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இலங்கையை தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் நாட்டில் அவர் அளித்த பேட்டி: இலங்கை ஒரு நடுநிலை நாடு. ஆனால் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். சீனர்கள் சுமார் 1500 ஆண்டுகளாக இலங்கையில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு என்று இதுவரை எந்த ராணுவ தளமும் இல்லை. சீனாவுடன் இலங்கை எந்த இராணுவ உடன்படிக்கையையும் கொண்டிருக்கவில்லை. சீனா அதில் ஈடுபடும் என்று நான் நினைக்கவில்லை. அதே சமயம் இலங்கையின் கடனுக்காக 99 வருட குத்தகைக்கு தெற்கு துறைமுகமான ஹம்பந்தோட்டாவை சீனர்கள் ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் எந்த பிரச்னையும் இல்லை. அந்த துறைமுகம் சீனாவின் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், அதன் பாதுகாப்பு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கல்வி, தசைப்பயிற்சி: பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்