திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் குளிர்சாதன ஓய்வு அறை: எம்எல்ஏ திறந்து வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் குளிர்சாதன ஓய்வு அறையை வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார். திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை போன்ற பிற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து அதிகாலை 4.30 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்காக ஏற்கனவே இருந்த அறை சீரமைக்கப்பட்டு அதில் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரூ.5 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட ஓய்வறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பணிமனை பொது மேலாளர் எஸ்.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.

கோட்ட மேலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குளிர்சாதன ஓய்வறையை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதில் நகரச் செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், நகர்மன்ற முன்னாள் தலைவர் பொன்.பாண்டியன், நகர அவைத் தலைவர் கமலகண்ணன், நேதாஜி, பிளேஸ்பாளையம் அசோக்குமார், தொமுச தொழிற் சங்க தலைவர் சுதாகரன், பொதுச் செயலாளர் ரவி, பொருளாளர் முரளி, அமைப்பு செயலாளர் டில்லி, துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், பிரசார செயலாளர் பழனி, தாம்பரம் பணிமனை ஓட்டுனர் செயலாளர் ஹரிமுத்து, பணிமனை நடத்துனர் செயலாளர் பழனி, ஓட்டுனர் செயலாளர் சாம்ராஜ், ஓட்டுநர் பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், தொழில்நுட்பச் செயலாளர் மார்ட்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்