திருத்தணி தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்: எம்எல்ஏ அடிக்கல்

பள்ளிப்பட்டு: திருத்தணி தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளை எஸ்.சந்திரன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் கொத்தகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, குழந்தைகள் நேய உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம், கர்லம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கர்லம்பாக்கம் காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், அத்திமாஞ்சேரிப்பேட்டையில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் திரவுபதி அம்மன் ஆலய வளாகத்தில் கலையரங்கம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் தாங்கல் காலனி ஊரட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சாய் சிவக்குமார், ஒன்றிய பொறியாளர் சாவித்திரி, மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ரவீந்திரநாத், திருமலை லோகநாதன், ஒன்றிய குழு துணைத் தலைவர் பாரதி, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் முரளிசேனா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவராஜன், நிர்வாகிகள் கதிரவன், மோகன், கோவர்தன் நாயுடு, மணி, சிவக்குமார், சுப்பிரமணி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் வசந்தா பிரகாசம், கல்பனா கிருஷ்ணசந்த் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு