திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகனின் ஆறுபடை வீடுகளில் 5ம் படை வீடு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு, ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைப்பெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான சித்திரைமாத பிரம்மோற்சவ விழா முருகன் கோயிலில் நேற்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க கோயில் மரத்தில் கொடியேற்றப்பட்டது.

அப்போது, முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகனை தரிசித்து வழிப்பட்டனர். இந்த பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தினமும் காலை, இரவு என இரு வேலைகளிலும் சிம்ம வாகனம், புலி வாகனம், மயில்வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாடு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு உற்சவர் முருகப்பெருமான் காட்சியளிப்பார். இந்த பிரம்மோற்சவம் வரும் மே 5ம் தேதி வரை நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா மற்றும் கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

Related posts

ரசாயன தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்து பலி 11 ஆக அதிகரிப்பு: ஆலை உரிமையாளர்கள் மீது வழக்கு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

2-வது தகுதிச்சுற்று: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு!