திருமங்கலம் அருகே உள்ள கோயில் விழாவில் வெள்ளை நிற சேலையில் பெண்கள் பங்கேற்பு..!!

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கோயிலில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் வெள்ளை நிற சேலை உடுத்தி கோயில் விழாவை கொண்டாடி வருகின்றனர். திருமங்கலம் அருகே சாத்தங்குடி கிராமத்தில் வல்லையப்பன், வல்லம்மாள் கோயில் உள்ளது. விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இந்த கோயிலில் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை 3 நாள் திருவிழாவை மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தி கொண்டாடுவர்.

அந்த வகையில் நேற்று தொடங்கியுள்ள விழாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வெள்ளை நிற சேலை உடுத்தி கலந்துக்கொண்டனர். முயல் வடிவில் வந்த சாமியை ஒரு சமூகத்தினர் சமைத்து உண்டதால் பல ஆண்டுகளாக அந்த குடும்ப பெண்கள் வெள்ளை சேலை அணிந்து கோயிலில் வழிபடுவது ஐதீகமாக இருந்து வருகிறது.

Related posts

காதணி விழா முடிந்து கடலில் குளித்த சிறுமி உட்பட 2 பேர் பலி

அதிமுக ஒன்று சேர வேண்டும் என்றால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இபிஎஸ் தலைமையை ஏற்றால் பரிசீலிப்போம்: முன்னாள் அமைச்சர் கண்டிஷன்

கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி