திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்மன் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கழுக்குன்றத்தில் புகழ் பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. தாழக்கோயிலான பக்தவச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில் புகழ் பெற்ற திரிபுரசுந்தரியம்மன் கோயில் உளளது. இவ்வாலயத்தில், ஆண்டுதோறும் ஆடிப்பூர திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நேற்று தொடங்கி, வரும் 23ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதற்கான, திரிபுரசுந்தரியம்மன் கோயில் கொடிமரத்தில் நேற்று காலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில், கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் விஜயன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related posts

பாஜகவுக்கு அரசியல் அடியாகவும், நரேந்திர மோடிக்கு தார்மிக தோல்வியாகவும் அமையும் தேர்தல் முடிவுகள் : காங்கிரஸ் கருத்து!!

மக்களவை தேர்தல்: தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி அபார வெற்றி

ஆந்திராவில் ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து..!!