தூக்கில் தொங்குவதை செல்பி எடுத்து மனைவிக்கு அனுப்பி கணவன் தற்கொலை

ஈரோடு: கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர், பாலிமேடு பகுதியை சேர்ந்தவர் டேவிட் (34). இவர், தாய்மாமா மகளான ஷாலினி ஜெனிபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ஐயப்பா நகருக்கு வந்து தங்கினர். டேவிட் பெருந்துறையில் உள்ள ஒரு ஸ்டீல் கம்பெனியில் வேன் டிரைவராகவும், ஷாலின் ஜெனிபா பால் கம்பெனி ஒன்றிலும் பணியாற்றி வந்தனர். சமீபகாலமாக குடிப்பழக்கத்திற்கு டேவிட் ஆளானதால் இருவருக்கும் அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது. விரக்தியில் இருந்த டேவிட், நேற்று முன்தினம் மதியம் மனைவியின் துப்பட்டாவால் சுருக்கு போட்டவாறு செல்பி புகைப்படம் எடுத்து மனைவி ஜெனிபருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி தற்கொலை செய்து கொண்டார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்