சர்வதேச புத்தக கண்காட்சி 16ம் தேதி நடக்கிறது


சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகிற 16, 17, 18ம் தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி நடக்கிறது. 39 நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்தியாவில் 10 மாநிலங்கள் கலந்து கொள்கின்றன. கண்காட்சியில், கருத்தரங்குகள், வெளியீட்டு விழாக்கள், குழு விவாதங்கள் இடம்பெறுகின்றன.

தினமும் மாலையில் இந்தியா, மலேசியா கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இறுதி நாளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாக இருக்கிறது. தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 200 புத்தகங்களும் வெளியிடப்பட உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு