‘தி இந்தியன் கிச்சன்’ உஸ்பெகிஸ்தானில் இந்திய உணவகம் நடத்தி அசத்தும் பெங்களூருவாசி: சுவை ஊறும் உணவு தயாரித்து கலக்கும் சென்னை சமையல்காரர்

சமர்கண்ட்: இந்தியாவின் பெங்களூருவை சேர்ந்த நபர் ‘தி இந்தியன் கிச்சன்’ என்ற பெயரில் உஸ்பெகிஸ்தானில் நடத்தி வரும் இந்திய உணவகம் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த முகமது நவுஷாத் எக்கு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வு காலத்தில் உலகம் முழுவதும் சுற்றி பார்க்க ஆசைப்பட்ட முகமது நவுஷத், உஸ்பெகிஸ்தானின் புகழ் பெற்ற சுற்றுலா இடங்களில் ஒன்றான சமர்கண்டுக்கு கடந்த ஓராண்டுக்கு முன் சுற்றுலா பயணியாக சென்று சில நாட்கள் தங்கினார்.

அப்போது காலை வேளையில் தனக்கு பிடித்த மசாலா டீ, பராத்தாவை தேடி நீண்ட தூரம் அலைந்த சம்பவம், சமர்கண்டில் இந்திய உணவகம் ஒன்றை திறக்க நவுஷத்தை தூண்டியது. அதன்படி சமர்கண்டில் இந்திய உணவுகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் ‘தி இந்தியன் கிச்சன்’ என்ற உணவகத்தை திறந்துள்ளார். இதுகுறித்து முகமது நவுஷத் கூறியதாவது, “நான் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். அங்கெல்லம் ஏதோ ஒரு உணவகத்தில் இந்திய உணவுகள் கிடைக்கும். ஆனால் இந்திய உணவுகள் மட்டுமே கிடைக்கும் தனி உணவகம் இருப்பதில்லை. சமர்கண்டிலும் எனக்கு பிடித்த டீ, உணவை தேடி அலைந்தேன்.

என்னை போலவே இங்கு வசிக்கும் 3,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இந்திய உணவை மிகவும் தவற விடுவதாக வருத்தப்படுவதை நான் கேட்டுள்ளேன். அதனால் தான் இங்கே தனியாக இந்திய உணவகத்தை திறக்க முடிவு செய்து ‘தி இந்தியன் கிச்சன்’ தொடங்கினேன். இப்போது சமர்கண்ட் தான் எனக்கு நிரந்தர வீடு. நாள்தோறும் 400க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வருகின்றனர். இந்தியர்கள் மட்டுமின்றி உஸ்பெகிஸ்தானுக்கு சுற்றுலா வருபவர்களும் இங்கு வந்து இந்திய உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். திருமணங்கள், சுபநிகழ்ச்சிகளுக்கும் செய்து தருகிறோம்” என்று தெரிவித்தார். இந்த உணவகத்தில் சென்னையை சேர்ந்த அசோக் காளிதாசா என்பவர் பிரியாணி மசால் தோசை உள்ளிட்ட உணவுகளை சமைத்து அசத்தி வருகிறார்

Related posts

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் உதவி தொகையாக ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சாலையில் நடந்து சென்றபோது இளம்பெண்ணை ஆக்ரோஷமாக முட்டி 50 மீட்டர் தூரம் இழுத்து சென்ற மாடு: மேலும் பலர் காயம்

சென்னையின் முதல் குரல் புத்தகம் வெளியீடு எதிர்மறை சிந்தனை வரும்போது ஆறுதல் தருவது புத்தகம்தான்: நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை