இலங்கை – அயர்லாந்து மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

காலே: இலங்கை – அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, காலே சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த 2 போட்டிகளுமே காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் இன்று தொடங்கும் நிலையில், 2வது டெஸ்ட் ஏப். 24ம் தேதி தொடங்குகிறது.

2018-19ல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய அயர்லாந்து இது வரை 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி அனைத்திலும் தோற்றுள்ளது. எனினும், சமீபத்தில் வங்கதேசத்துடன் நடந்த டெஸ்டில், 2வது இன்னிங்சில் உறுதியுடன் போராடி கணிசமாக ரன் குவித்தது அயர்லாந்து வீரர்களின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அயர்லாந்து அணி விளையாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?