தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயோ கேட்டலை சர்ஸ் சங்கம் தொடக்கம்

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனி வாசன் பொறியியல் கல்லூரியில் உயிர் மருத்துவ பொறியியல் துறை சார்பில், பயோ கேட்டலை சர்ஸ் சங்க தொடக்க விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மனுவேல் ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் மணி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக தனியார் நிறுவன நிர்வாகி முகமது சாதிக் ராஜா கலந்துகொண்டு, பயோ கேட்டலை சர்ஸ் சங்கத்தை தொடங்கி வைத்து, துறையின் செயல்பாடுகள், முக்கியத்துவம் மற்றும் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து, இதனை மாணவ – மாணவிகள் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: அதிமுக கண்டனம்

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு

தங்கம் விலை பவுனுக்கு 120 குறைந்தது