தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில், தேசிய இளைஞர் தின விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், கல்லூரி முதல்வர் மனு வேல்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக இயக்குநர் மணி, தலைமை நிதி அதிகாரி சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், கலந்து கொண்டவர்கள் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், இளைஞர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். திடமான, தீர்க்கமான திறமை உள்ள இளைஞர்களை கொண்டுதான் இந்த நாட்டை நல்ல பாதையில் கொண்டு சென்று நல்ல செயல் திட்டங்கள் செயல்படுத்த முடியும், நல்லா சமூகத்தையும் படைக்க முடியும். மேலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகள், நிலைகள் மற்றும் மாணவர்கள் எந்த துறையாக இருந்தாலும் அதில் சிறந்து விளங்க தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றனர். இந்நிகழ்ச்சியில், உதவி பேராசிரியர்கள், 200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related posts

தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்; ஆர்எஸ்எஸ் பிரமுகர் கேசவ விநாயகத்திடம் 5 மணி நேரம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை

அகில இந்திய அளவில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சி திமுக மட்டுமே: இந்தியாவில் 5வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது

40க்கு 40 வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு கரம் குவித்து நன்றி.! இந்தியா கூட்டணியின் வெற்றியால் சர்வாதிகாரத்திற்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்