தா.பேட்டை மாரியம்மனுக்கு பக்தர்கள் தீர்த்தகுடம் எடுத்து வழிபாடு

 

தா.பேட்டை, மே 1: தா.பேட்டையில் செங்குந்தர் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
தா.பேட்டையில் உள்ள அருள்மிகு செங்குந்தர் மாரியம்மன்கோயில் திருவிழா நேற்று (30ம் தேதி) தொடங்கி மே 6ம் தேதி வரை நடக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த திருவிழாவை விழாவை முன்னிட்டு நேற்று செவந்தாம்பட்டி மதுரை வீரன் சுவாமி கோயிலில் இருந்து திரளான பக்தர்கள் ராஜவீதி வழியாக தீர்த்தகுடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து அம்மன் படிநிலையில் ஊற்றினர். அப்போது விவசாயம் செழிக்கவும், உலக நன்மைக்காகவும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

 

 

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை