பாக்.கில் தீவிரவாதிகள் தாக்குதல்- 7 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானின் கவதார் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். பாகிஸ்தானின் குவாதர் துறை முக நகரில், ஹார்பருக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நேற்று நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றான். இந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

தகவல் அறிந்து விரைந்த போலீசார் காயமடைந்த நபர் மற்றும் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்த நபர் அங்கிருந்த சலூன் கடையில் வேலை செய்பவர். இவர்கள் அனைவரும் பஞ்சாபின் கனேவால் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Related posts

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும்: கார்கே திட்ட வட்டம்

சென்னை கொரட்டூரில் வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுவன் பலத்த காயம்

இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனு