கிரேன் விழுந்து வாலிபர் பரிதாப பலி: போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, கிரேன் விழுந்து வாலிபர் பலியானார். கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் சிப்காட்டில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு சில மாதங்களாக எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜ்(25) என்பவர் வேலை செய்து வந்தார்.

நேற்று வழக்கம் போல் இவர் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரும்பு தூண்களை எடுத்து வைக்கும்போது கிரேன் இவர் மீது எதிர்பாராதவிதமாக விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த பாதிரிவேடு போலீசார், அங்கு விரைந்து உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Related posts

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை