ஒரகடம் அருகே அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்; 16 பேர் படுகாயம்

ஸ்ரீ பெரும்புதூர்: பெங்களூரில் இருந்து நேற்றிரவு சுமார் 40 பயணிகளை ஏற்றி கொண்டு ஒரு அரசு பஸ் சென்னைக்கு புறப்பட்டது. இன்று காலை தாம்பரம் நோக்கி, வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் வந்தது. ஸ்ரீ பெரும்புதூர் அடுத்த ஒரகடம் மேம்பாலம் அருகே பஸ் நிறுத்தத்தில் இன்று காலை 7 மணியளவில் பயணிகளை இறக்கி விடுவதற்காக நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி, கட்டுப்பாட்டை இழந்து, அரசு பஸ்சின் மீது வேகமாக மோதியது.

இதில் பயணிகள் மற்றும் லாரி டிரைவர் உள்பட 16 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அலறி துடித்தனர். தகவலறிந்து ஒரகடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 16 பேரையும் மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதால், அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக சேதமடைந்த அரசு பஸ், டாரஸ் லாரியை கிரேன் மூலம் அகற்றப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

போக்சோ வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா

மேகவெடிப்பு காரணமாக சிக்கிமில் பெருவெள்ளம், நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு