டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் 500 கடை மூடுவது தொடர்பாக ஒரு வாரத்தில் அறிவிப்பு வரும்

சென்னை: தமிழ்நாட்டில் 500 மதுபான கடைகள் மூடுவது தொடர்பான அறிவிப்புகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் மதுபான கடைகள் 5,329 செயல்பட்டு வருகின்றன. இதில் 500 கடைகள் மூடப்படும் என நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி, மூடப்படும் மதுபான கடைகள் தொடர்பான பட்டியல் தயார் செய்யப்பட்டு இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதற்கான அறிவிப்புகள் ஒரு வாரத்தில் வெளியாகும் என டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி!

ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை எஸ்.பி.சிலம்பரசன் தகவல்

கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்