கோவையில் டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு

கோவை: கோவையில் டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லாரியில் வெல்டிங் வைத்தபோது டேங்கர் வெடித்து சிதறியதாக தகவல் தெரிவித்துள்ளனர். லாரி வெடித்த விபத்தில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி உயிழந்துள்ளார். படுகாயமடைந்த மற்றொரு நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெல்டிங் பணி நடந்து வந்த லாரி டேங்கரில் வேதிப்பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம். சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

கோவை மலுமிச்சம்பட்டி அருகே வெல்டிங் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்றையதினத்தில் வேதிப்பொருட்கள் கொண்டு செல்லும் லாரியை தண்ணீர் கொண்டு செல்லும் லாரியாக மாற்ற வெல்டிங் வைக்கும் பணிக்காக வந்தது. நேற்று முதல் வெல்டிங் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. லாரியின் மேற்பகுதி திறக்கமுடியாத காரணத்தால் வெல்டிங் வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் வெல்டிங் பணி நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக லாரியில் உள்ள டேங்கர் வெடித்து சிதறியது.

இதில் சம்பவ இடத்திலேயே வக்கீல் என்ற வடமாநில இளைஞர் உயிரிழந்துள்ளார். அருகில் இருந்த மற்றொரு நபர் ரவி என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் . விபத்தில் உயிழந்த நபரின் உடலை கைப்பற்றி போலீசார் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உலகக்கோப்பையில் ஓமனுக்கு எதிராக சூப்பர் ஓவரில் நமீபியா வெற்றி

வீட்டில் 70 சவரன் கொள்ளை 2 வாரமாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் தனிப்படை போலீசார்

சபலெங்கா முன்னேற்றம்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா