தமிழ்நாடு வீரர் நடராஜன் பிறந்தநாள்; நடிகர் அஜித் கேக் ஊட்டி வாழ்த்து: புகைப்படங்கள் வைரல்!

ஹைதரபாத்: சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் வீரர் நடராஜன் தனது பிறந்தநாளை நடிகர் அஜித்குமாருடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தமிழ்நாடு வீரர் நடராஜன் விளையாடி வருகிறார். இவர் இன்று (04.04.2024) தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கான பிறந்தநாள் விழா ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் நள்ளிரவில் நடைபெற்றது.

இதில் நடராஜன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத வகையில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். நடிகர் அஜித் கலந்து கொண்டு நடராஜனுக்கு கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இருவரும் மாறி மாறி கேக் ஊட்டிக் கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் தற்போது ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

 

Related posts

பாஜக கூட்டணியில் குழப்பம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டி?

ஒடிசா, ஆந்திரா மாநில முதலமைச்சர்கள் இன்று பதவியேற்பு

தேர்தல் தோல்வி, தமிழ்நாடு பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல்: அறிக்கை கேட்கிறது கட்சி மேலிடம்