குடிசையில்லா தமிழகம் உருவாக்கும் ‘‘கலைஞர் கனவு இல்லம்” திட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: நிலைக்குழு தலைவர் தனசேகரன் பாராட்டி பேச்சு

சென்னை: 2024-25ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ெஜட் தாக்கல் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து கணக்கு நிலைக்குழு தலைவர் கே.கே.நகர். தனசேகரன் பேசியது; 2030ம் ஆண்டுக்குள் குடிசையில்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். திராவிட மாடல் அரசுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக மிக சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்த மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் ஆணையர், வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவருக்கு எனது நன்றி.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக நமது சென்னை மாநகராட்சி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. தடையற்ற மின்சாரம் கிடைக்க ரூ 5.03 கோடியில் 113 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மார்களுக்கான மகப்பேறு சிறப்பு அழைப்பு மையம்” அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொசுக்கள், பாம்புகள் இல்லாதவாறு முறையாகப் பராமரிக்கவேண்டும்.

புதிய விளையாட்டு திடல் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதனுடன் மாநகராட்சிக்கு சொந்தமாக பல நிலங்கள் மற்றும் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட பூங்காக்கள் உள்ளன. இவற்றில் தனியார் பங்களிப்புடன் விளையாட்டு பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தற்போது தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் பல விளையாட்டு போட்டிகளை நடத்தி வீரர்களுக்கு ஊக்கம் அளித்துவரும் நம் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சென்னை மாநகராட்சி சார்பாக இந்த கோரிக்கையை வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மன்ற கூட்டத்தில் வைக்கப்படும் பல பொருள்களின் விவரம் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கிறது; ஒன்று தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் அளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் முழுமையாகத் தமிழில் இருக்கவேண்டும். தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நமது ஆட்சியில் அரசு அலுவலகத்தில் இவ்வாறு நடைபெறுவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு கே.கே.நகர்.தனசேகரன் பேசினார்.

Related posts

நீலகிரி கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு

சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி

நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே