தமிழ்நாட்டில் சில பகுதிகளில் தொடரும் மழை: மேட்டூர் அணை, ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு..!!

சேலம்: தமிழ்நாட்டில் சில பகுதிகளில் தொடரும் மழையால் நீர்நிலைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 4,605 கனஅடியில் இருந்து வினாடிக்கு 5,727 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 103.31 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 69.19 டி.எம்.சி.யாக உள்ளது.

காவிரி கரையோரமான தேன்கனிக்கோட்டை, அஞ்சட்டி, நாற்றுப்பாளையம், பிலிகுண்டுலு ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2 நாட்களாக 5 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 6,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள வனப்பகுதிகளான ஹைவேவிஸ், இரவங்கலாறு, மேகமலை மற்றும் சுருளி வனப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தொடர்ந்து 3வது நாளாக சுருளி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

Related posts

கேரளாவில் பஸ் டிரைவருடன் மோதல்: எம்எல்ஏ, மேயர் மீது போலீஸ் வழக்கு பதிவு

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணைய முகவரி அறிவிப்பு