தமிழ்நாட்டில் ரூ.430 கோடி முதலீடு செய்கிறது டைட்டன் நிறுவனம்; கூடுதலாக 1,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் டைட்டன் நிறுவனம் ரூ.430 கோடி முதலீடு செய்யவுள்ள நிலையில், உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்றுள்ளன. மேலும் 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குவதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் டைட்டன் நிறுவனம் ரூ.430 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடார்பாக உலக முதலீட்டாளர் மாநாட்டில் டைட்டன் நிறுவனத்திற்கும்-தமிழ்நாடு அரசுக்கும் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. டைட்டன் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதன் காரணமாக கூடுதலாக 1,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்