புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மீது அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல்

சென்னைபுதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு எதிராக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி:சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை என்பன உள்பட ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி எழும்பூர் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில், எனக்கு எதிராக ஆதாரமின்றி புகார் செய்துள்ளார். அந்த புகாரை கட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.டுவிட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார். பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்துள்ளார். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை அவதூறு சட்ட பிரிவின்கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related posts

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1165 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது: சென்னை மாநகராட்சி

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜுன்ஜுனுவில் தாமிர சுரங்கத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கென்யாவுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா