தமிழக அமைச்சரவை மாற்றம்.! பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து சா.மு. நாசர் விடுவிப்பு: அமைச்சராகிறார் டி.ஆர்.பி. ராஜா

சென்னை: மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி.ராஜா வருகின்ற 11-ஆம் தேதி பொறுப்பேற்பதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. பால்வாரத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டிஆர்பி ராஜா எந்த துறைக்கான அமைச்சர் என்று விரைவில் தெரிவிக்கப்படும். அதே சமயம் பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முதல்வரின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இந்த அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து வரும் 11 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. தொண்டர் ஒருவரை கல்லால் அடித்து சமூக ஊடகங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய பால்வளத்துறையை கவனித்து வந்த ஆவடி தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான தா.மு.நாசர் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Related posts

சாலையோரத்தில் வீசிச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்ட திருநங்கை!

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை