அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் தமிழ்நாட்டில் தொடங்க திட்டம்..!!

சென்னை: அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தமிழ்நாட்டில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசானது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஜன.7, 8ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்தவுள்ளது. 2 நாள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் கலந்துக்கொள்ள உள்ளன. தொழில் நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு முயற்சி நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு நிறுவனமும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒட்டி ஆர்.என்.டி.யின் மையத்தை தமிழகத்தில் நிறுவுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தமிழக தொழில்துறை அதிகாரிகள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒட்டி ஒவ்வொரு நாடுகளில் இருக்கக்கூடிய முன்னணி நிறுவனங்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில் சில நிறுவனங்கள் அவர்களின் ஆர்.என்.டி. நிறுவனத்தை உடனடியாக தமிழகத்தில் நடத்துவதற்கு முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தமிழ்நாட்டில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க போயிங் நிறுவனத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள முன்னணி விமான உதிரி பாகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான போயிங், தமிழகத்தில் தனது ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்குகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகிறது. தமிழக அரசின் தொழில்துறை அதிகாரிகள் இதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

Related posts

இடைத்தேர்தல் புறக்கணிப்பு அதிமுகவின் முடிவு மேலிட உத்தரவு: ப.சிதம்பரம் பதிவால் பரபரப்பு

வீட்டில் பதுக்கிய யானை தந்தம் மான் தோலுடன் 4 பேர் கைது

ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது