தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3°-5° C அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 27.04.2024 முதல் 01.05.2924 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடர்ந்து 02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக உள் மாவட்டங்களில் மாவட்டங்களில் 27.04.2024 upதல் 91.05.2024 வரை அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39-42* செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-39 செல்சியஸ் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:
27.04.2024 முதல் 01.05.2024 வரை; அடுத்த ஐந்து இனங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை, நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும் :மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

1,303 ஆதி திராவிட மகளிர் மற்றும் இளைஞர்களை தொழில் முதலாளிகள் ஆக்கியுள்ளது அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்: திமுக பெருமிதம்