தமிழ்நாட்டில் 5 இடங்களில் சதமடித்த வெயில்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மதுரை, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஒருசில தென் மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவுகிறது. வட தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2டிகிரி – 3டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை சேலம், ஈரோட்டில் 102.2 டிகிரி பாரன்ஹீட், திருப்பத்தூரில் 100.76டிகிரி பாரன்ஹீட், வேலூரில் 100.58 டிகிரி பாரன்ஹீட், கரூர் பரமத்தி 100.4 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

வட தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் 31 – 36டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 20 – 30டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 36.5டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த 50 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2டிகிரி – 3டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். இன்று வட தமிழகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Related posts

தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்

நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்திற்கு கிடைக்குமா ‘கிரீன் சிக்னல்’: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஓவேலியில் 125 ஆண்டுகளை கடந்தும் போக்குவரத்துக்கு பயன்படும் இரும்பு பாலம்