ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்: மக்களவை தேர்தலில் போட்டி?

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். 2006, 2011, 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களிலும் தமிழிசை போட்டியிட்டுள்ளார். 2009 மக்களவை தேர்தலில் வடசென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். தமிழக பாஜக தலைவராக 2014 முதல் 2019ம் ஆண்டு வரை பதவி வகித்தார். 2019 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தமிழிசை தோல்வி அடைந்தார்.

2019ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தெலங்கானா ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றார். 2021 பிப். 16ம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பும் தமிழிசைக்கு வழங்கப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடக் கூடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் தமிழிசை ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை அல்லது புதுச்சேரியில் தமிழிசை போட்டியிட வாய்ப்பு உள்ளது.

 

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்