கடல் கடந்து தமிழர்கள் வெற்றி பெற முயற்சி, உழைப்பே காரணம் : அயலகத் தமிழர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை : சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் அயலகத் தமிழர் மாநாட்டில் ‘எனது கிராமம்’ என்ற திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அயலகத் தமிழர் மாநாட்டில் கணியன் பூங்குன்றன் பெயரில் 13 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கப் பதக்கம் வழங்கினார். சாதனையாளர்களுக்கு தலா 40 கிராம் எடை கொண்ட தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. பின்னர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில்,”எனக்கு உடல்நிலை சரியில்லை என சிலர் பேசும்போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. தமிழர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும்போது எனக்கு என்ன குறை இருந்துவிடப் போகிறது. எனக்கு எப்போதும் மக்களைப் பற்றிதான் நினைப்பு. என்னைப் பற்றி நான் நினைத்ததே இல்லை. ஒரே மாதத்தில் தமிழ்நாடு அரசு ரூ.8000 கொடுத்துள்ளதாக சகோதரி ஒருவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000, பொங்கல் பரிசாக ரூ.1,000, வெள்ள நிவாரணமாக ரூ.6,000 கிடைத்துள்ளது என சகோதரி கூறுகிறார். தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சயாக இருகும்போது அதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு?. உலகத்தை வளப்படுத்தச் சென்ற தமிழர்கள் கொண்டாடும் மாநாடு இது. கடல் கடந்து தமிழர்கள் வெற்றி பெற முயற்சி, உழைப்பே காரணம். 2010-ல் வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவை உருவாக்கினார் கலைஞர்.

அயலக தமிழர் நலனுக்காக தனி துறை உருவாக்கி, தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். வேர்களை தேடி என்பது இந்த ஆண்டின் முத்தாய்ப்பான திட்டமாக அமைந்துள்ளது. அயலக தமிழர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கைஎடுக்கப்படுகிறது. அயலக தமிழர்கள் பிரச்சனைகளை சந்திக்கும்போது தமிழ்நாடு அரசு பத்திரமாக அவர்களை தாயகம் அழைத்து வந்துள்ளது. எப்போது பிரச்சனை வந்தாலும் தமிழர்களை பாதுகாப்பாக தமிழ்நாடு அரசு மீட்டு வருகிறது,”இவ்வாறு தெரிவித்தார். .

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்