தமிழ் முகமூடி போட்டுக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என சிலர் தப்பு கணக்கு போடுகின்றனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ் முகமூடி போட்டுக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என சிலர் தப்பு கணக்கு போடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 42ம் ஆண்டு இசை விழாவில் பங்கேற்று விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இயல் செல்வம் விருது எஸ். ராஜாவுக்கும், இசை செல்வம் விருது எஸ்.மகதிக்கும் வழங்கப்பட்டது. ராஜ ரத்னா விருது கணேசனுக்கும், நாட்டிய செல்வம் விருது எஸ்.பழனியப்பனுக்கும் வழங்கப்பட்டது. வீணை செல்வம் விருது ராஜேஷ் வைத்யாவுக்கும், தவில் செல்வம் விருது கண்ணனுக்கும் வழங்கப்பட்டது.

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முத்தமிழ்ப் பேரவையின் 42 வது ஆண்டு இசைவிழாவில் பங்கேற்பதில் கிழ்ச்சி அடைகிறேன். இயல் செல்வம் விருது பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, இசை செல்வம் விருது பெற்ற பாடகி மகதிக்கு பாராட்டுக்கள். கலைஞர் பெயரால் முத்தமிழ்ப் பேரவை விருது வழங்க வேண்டும். சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கு விரோதமான செயல்களை செய்துகொண்டே தமிழ் முகமூடி போட்டுக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என சிலர் தப்பு கணக்கு போடுகின்றனர். அவ்வாறு ஏமாற்றிவிடலாம் என தப்பு கணக்கு போடுவோருக்கு தமிழக மக்கள் மட்டுமல்ல இந்திய மக்களும் பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

Related posts

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு