தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் இன்று சமூகநீதி தேசிய மாநாடு

சென்னை: சமூகநீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு டெல்லியில் இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. காணொலி காட்சி மூலம் முதல்வர் கலந்துக்கொண்டு தலைமையுரை ஆற்றுகிறார். டெல்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க், கன்னாட் பகுதியில் இன்று மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த அமைப்பின் அமைப்பாளர் முன்னாள் நீதிபதி ஈஸ்வரய்யா வரவேற்புரையாற்றுகிறார். அதேபோல, ஒருங்கிணைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் முதன்மை உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு மாநில முதல்வர்கள், தேசிய கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாட்டு தலைவர்கள் கி.வீரமணி, வைகோ, தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். சமாஜிக் சேட்னா பவுண்டேஷன் நிறுவனரும், அலாகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வீரேந்திர சிங் யாதவ் நன்றியுரை ஆற்றுகிறார்.

Related posts

திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர் 287 பேர் ஆப்சென்ட்

மாநகர எல்லைப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க மல்லுகட்டும் ஊழியர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை

காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: 2009 பேட்ஜ் காவலர்கள் வழங்கினர்