தாம்பரம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.3 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்

தாம்பரம்: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின்போது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். நேற்று இரவு தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தபோது அதில் பெட்டி பெட்டியாக விலை உயர்ந்த மதுபாட்டிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மது பாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்களை ஏற்றிவந்த மினி வேன் ஓட்டுநரை சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்தபோது மினி வேனை ஓட்டிவந்தவர் ஏழுமலை என்பது தெரியவந்தது. மேலும் பம்மலில் சிலர் தன்னிடம் மதுபானங்களை மினி வேனில் ஏற்றி கோவிலாஞ்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கொடுக்கும்படி கூறியதால் கொண்டுவந்ததாக கூறியது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து கள்ள சந்தையில் விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்டதா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: பாஜக நிர்வாகிகள் இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார்கள் என்று சிபிசிஐடி போலீசார் தகவல்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

கொடைக்கானல் படகு போட்டி ரத்து