தையல் கடை தீ விபத்தில் சிக்கி 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 7 பேர் பலி: மகாராஷ்டிராவில் சோகம்

மும்பை: தையல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் சத்ரபதி சம்பாஜி நகரில் இன்று அதிகாலை 4 மணியளவில் தையல் கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அக்கம்பக்கத்தினர் பெரும் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் இந்த பயங்கர தீ விபத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த 7 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. அவர்களில் 3 பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் 2 குழந்தைகள் ஆவர்.

7 பேர் தீயில் கருகி பலியான சம்பவம் குறித்து சம்பாஜி நகர் காவல் ஆணையர் மனோஜ் லோஹியா கூறுகையில், ‘தையல் கடையின் மேல் தளங்களில் குடியிருப்பாளர்கள் வசித்து வந்தனர். அந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் தீ பரவவில்லை. ஆனால் அவர்கள் புகையை சுவாசித்ததால் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீ விபத்தில் பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related posts

சென்னையில் கலைஞர் புகைப்பட கண்காட்சி 7ம் தேதி வரை நீட்டிப்பு..!!

பெருங்களத்தூர் – செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்