சிரியா தலைநகர் டமாஸ்கஸில் புனித தலம் அருகே வெடிகுண்டு தாக்குதல்; 6 பேர் உயிரிழப்பு.. 23 பேர் படுகாயம்..!!

சிரியா: சிரியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்; 23க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. சைதா ஜெயினா புனித தலத்தில் வெடிகுண்டுடன் இருந்த கார் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதன் அருகில் இருந்தவை முற்றிலும் சேதம் அடைந்தன. படுகாயமடைந்த 23க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொகரத்துக்கு இடையே கடந்த 3 நாட்களில் 2வது முறையாக நடந்த தாக்குதலால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. முந்தைய வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது!!

தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்

நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்திற்கு கிடைக்குமா ‘கிரீன் சிக்னல்’: பொதுமக்கள் எதிர்பார்ப்பு