வெயிலின் தாக்கத்தால் தேவை அதிகரிப்பு; மண் பாண்டங்கள் தயாரிப்பு அமோகம்

மதுரை: மதுரையில் கோடை காலத்தையொட்டி மண் பாண்டங்களின் தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு மார்ச் மாதம் முதலே வெயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் இளநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய் உள்ளிட்டவைகளை அதிகளவில் வாங்கி சாப்பிடுகின்றனர். மேலும், மண் பானை நீர் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால், மண் பானை விற்பனையும் சூடுபிடித்துள்ளது. கிடாரிபட்டி அருகே உள்ள அழகாபுரி, சுந்தரராஜன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மண் பாண்டம் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளி நல்ைலயன் (54) கூறியதாவது: கடந்த 37 ஆண்டுகளாக மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு பானை செய்ய 4 நாட்கள் ஆகும். தற்போது நவீன இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும் கையில் மண்பானை செய்வதுபோல அமையாது. பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பானை, சித்திரை, வைகாசி போன்ற கோடை மாதங்களில் தண்ணீர் பானை, கார்த்திகை மாதத்தில் மண் விளக்கு போன்றவற்றை தயாரிக்கிறோம். அதுபோக சமையல் பானைகள், கலய வகைகளும் செய்து விற்பனை செய்கிறோம்.

இங்கு தயாரிக்கப்படும் மண் பானைகளை கோயம்புத்தூர், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் மண் பானைகளின் தேவை அதிகரித்து, விற்பனை நன்றாக உள்ளது. மண் பானையில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு குளிர்ச்சி. பொதுமக்கள் மண் பாண்டங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்