கோடை மழை 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம்:நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வேதாரண்யத்தில் திடீரென்று பெய்த கோடை மழையால் உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கியதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

உப்பளங்களில் 90 நாளில் உற்பத்தியான உப்பு விற்பனை போக மீதி உப்பை மழையில் இருந்து பாதுகாக்க தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். பாத்திகளில் வாரி வைத்துள்ள உப்பை சேமித்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் நேற்று முதல் ஈடுபட்டனர். மீண்டும் உப்பு உற்பத்தி துவங்க ஓரிரு நாட்கள் ஆகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

இனப்பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை ஜூலையில் தெருநாய்கள் கணக்கெடுப்பு: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

ஒடிசா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் சரண் மஜி தேர்வு

Food spot