தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உடற்கூராய்வு தொடக்கம்..!!

சென்னை: தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உடற்கூராய்வு தொடங்கியுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலா தலைமையில் உடற்கூறாய்வு நடந்து வருகிறது. கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை தன்னுடைய வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்தியாவையே கலக்கிய நீட் மோசடி தொடர்பான வழக்கை விசாரித்தவர். விஜயகுமார் மரணத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உடற்கூராய்வு தொடங்கியுள்ளது. உடற்கூறாய்வு ஒன்றரை மணி நேரத்துக்குள் முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

தேனியில் இறுதிச்சடங்கு:

தற்கொலை செய்த டிஐஜி விஜயகுமாருக்கு அவரது சொந்த ஊரான தேனியில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. தேனி ரத்தினம் நகரில் வசிக்கும் விஜயகுமாரின் பெற்றோர் இல்லத்திற்கு உடல் கொண்டு வரப்படுகிறது. தற்கொலை செய்த விஜயகுமார் (45) போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சில்லிபாயிண்ட்….

இந்தோனேசியா ஓபன் கால் இறுதியில் லக்‌ஷயா

நியூயார்க்கின் புதிய ஆடுகளத்தில் எப்படி ஆடுவது தெரியவில்லை: குழப்பத்தைச் சொன்ன ரோகித்