தூய்மை பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 500 பேருக்கு வீடு வாங்க ரூ.55 கோடி மானியம்: ஆதிதிராவிடர் நலத்துறை அரசாணை வெளியீடு

சென்னை: தூய்மை பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற 500 பேருக்கு வீடுகள் வாங்க ரூ.55 கோடி மானியம் வழங்கி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவு: 2023-24ம் ஆண்டு சட்டமன்ற பேரவை வரவு – செலவு கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், “தூய்மை பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் வீடுகள் தூய்மை பணியாளர் நல வாரிய மானியத்துடன் ரூ.55 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்” என்று கூறி இருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்படும் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய வீடுகள் வாங்க மானியம் வழங்கி அரசாணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்