அத்திப்பட்டு ஊராட்சியில் சப் கலெக்டர் நேரில் ஆய்வு

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம், அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் பொன்னேரி சப் கலெக்டர் சாஹே சன்கேத் பல்வந்த் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் பொன்னேரி சப் கலெக்டர் சாஹே சன்கேத் பல்வந்த் அத்திப்பட்டு காலனி, அருணோதியா நகர், நேசன் நகர், பி.பி.சி.எல். நிறுவனம், செப்பாக்கத்தில் இருந்து மவுத்தும்பேடு செல்லும் என்.டி.ஆர். நிறுவனம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பகுதிகளை அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் கதிர்வேல் ஆகியோர் அதிகாரிகளை அழைத்து சென்று காண்பித்தனர். இவர்களுடன் வருவாய் துறை ஆய்வாளர் அருணாசலம், கிராம நிர்வாக அலுவலர்கள் ருத்ரன், வினோத் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை

மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி