குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே பாக்கம் கோட்டூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் நௌசாத். இவரது மனைவி ரம்ஜான்பேகம். இவர்களது மகன் முகம்மதுநபீஷ் (6). ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வாழ்க்கையை சேர்ந்தவர் ரபீக். இவரது மனைவி நஜீதாபேகம். இவர்களது மகன் ராசீத்(7). ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான்.

ரம்ஜான் பேகம் மற்றும் நஜீதாபேகம் இரண்டு பேரும் சகோதரிகள் ஆவர். இரண்டு பேரின் கணவர்கள் வெளிநாட்டில் பணியாற்றி வருகின்றனர். பள்ளி விடுமுறைக்காக நஜீதாபேகம் தனது குழந்தையுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமருகல் அருகே பாக்கம் கோட்டூர் வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் ராசித், முகமது நபீஷ் ஆகிய இரண்டு பேரும் சைக்கிள் ஓட்டி விளையாட சென்றனர்.

அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் அந்த வழியாக சென்றபோது திருமருகல் அருகே பாக்கம் கோட்டூரில் உள்ள அய்யனார் குளம் அருகே குழந்தைகள் விளையாடும் சைக்கிள் கிடந்ததை பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, இரண்டு குழந்தைகளும் தண்ணீரில் சடலமாக மிதப்பது தெரிய வந்தது.

Related posts

கோவை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை..!!

கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!