சமூக வலைதளங்களில் பட்டய கிளப்பும் வீடியோக்கள்: இன்னும் நல்ல மனசுக்காரங்க இருக்காங்க… மாணவர்களுக்கு தனியார் பஸ்சில் ரூ.5 மட்டும் கட்டணம் வசூல்

கோவை: கோவை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் அடுத்த வாரம் திறக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு செல்ல பெரும்பாலான மாணவர்கள் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. இதனால், மாணவர்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்வதையை விரும்புகின்றனர். இதனால், தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் கூட்டத்தை காண முடிவதில்லை. பள்ளிகள் அடுத்த வாரம் திறக்க உள்ள நிலையில், கோவை க.க.சாவடி-உப்பிலிபாளையம் வழியாக இயக்கப்படும் தனியார் பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேருந்து கட்டணம் ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தனியார் பேருந்து க.க.சாவடி, எட்டிமடை, மதுக்கரை, உக்கடம், அரசு மருத்துவமனை வழியாக உப்பிலிபாளையம் வரை இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 மட்டுமே டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

விமானம் நடுவானில் மேகக் கூட்டத்தில் உரசியதால் ஏற்பட்ட விபத்து பற்றி பரபரப்பு தகவல்!

சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் CMDA திட்டம்: தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

பாலினம் குறித்து வெளியிட்ட வீடியோவை நீக்கினார் யூடியூபர் இர்பான்!!