செங்கல்பட்டில் வெயிலின் தாக்கத்தை குறிக்கும் வகையில் வினோதம்: சாலையோரத்தில் காரின் மேற்கூரையில் ஆப்பாயில் போட்ட இளைஞர்கள்

செங்கல்பட்டு: தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக மக்களை வாட்டி வதைத்தது. குறிப்பாக கத்திரி வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். பகலில் பெரும்பாலும் பயணத்தை தவிர்த்தனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் சென்று வந்தனர். வீடுகளிலும் அனலாக காணப்பட்டதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவிர்த்தனர். ஏ.சி. வைத்திருந்தவர்கள், இரவில் மட்டுமின்றி பகல் நேரத்திலும் பயன்படுத்தி வந்தனர். வெயில் தாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சிலர், பைக்குகளில் செல்லும்போது குளித்து கொண்டே சென்ற காட்சிகளும் வைரலானது.

அதுபோன்று சில இளைஞர்கள், காரின் மேல் பகுதியில் ஆப்பாயில் போட்ட சம்பவம் நடந்துள்ளது. அதாவது, செங்கல்பட்டு- காஞ்சிபுரம் பைபாஸ் சாலையில், சில இளைஞர்கள் காரை நிறுத்தினர். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனால் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில், காரின் மேல்கூரையில் முட்டையை உடைத்து ஊற்றி ஆப்பாயில் போட்டனர். அதை கரண்டியால் மாற்றிபோடும் காட்சியும் வைரலானது. இந்த காட்சியை சாலையில் சென்றவர்கள் வேடிக்கையுடன் பார்த்து விட்டு சென்றனர். விநோதமான இந்த சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

Related posts

கடைசி சுற்றுக்கு முன் தபால் வாக்கு விவரங்கள் வெளியிடப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் எதிரொலி: இந்திய பங்குசந்தைகள் இன்று வரலாறு காணாத உச்சத்தில் நிறைவு..!

பூம்பாறை கிராமத்துக்கு போக்குவரத்து வசதி கோரி மனு..!!